/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : பிப் 02, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகில் கூழாங்கற்கள் கடத்திய லாரியை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியில் கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது கூழாங்கற்களை கடத்தி வந்த டிரைவர் ஒருவர், அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த லாரியை பறிமுதல் செய்து அதிகாரிகள் திருநாவலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.