/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல்
/
எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : டிச 29, 2024 11:09 PM

தியாகதுருகம்; தியாகதுருகம் பகுதியில் சுரங்கத்துறை அதிகாரி நடத்திய ஆய்வில் அனுமதியின்றி எம்.சான்ட் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலக உதவி புவியியலாளர் ரகுநாதகுமார்,29; இவர் கனிமவள கடத்தலை தடுக்கும்பொருட்டு, தியாகதுருகம்-மணலுார்பேட்டை சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3:20 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவ்வழியாக வந்த டிஎன்57ஏஎல்3412 என்ற எண் கொண்ட டாரஸ் டிப்பர் லாரியில் விருகாவூரை சேர்ந்த ராசு மகன் ராகவன், சின்னபையன் மகன் வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அரசின் அனுமதி எதுவும் இல்லாமல் 5 யூனிட் எம்.சான்ட் கடத்தி செல்வது தெரிந்தது.
அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருக்கும் போது இருவரும் தப்பி ஓடினர். ரகுநாதகுமார் புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை கைப்பற்றி தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.