நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சோழம்பட்டு கிராமத்தில் புயலால் சேதமடைந்த மக்காசோள பயிர்களை வேளாண் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கா சோள பயிர்களை மாவட்ட வேளாண் கண்காணிப்பு அலுவலர் கோப்பெருந்தேவி ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் புஷ்பராணி, உதவி இயக்குனர் ஆனந்தன், அலுவலர் மோகன்ராஜ், அலுவலர்கள் முத்துராஜ், சிவபிரியா, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.