/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நண்பரை பாட்டிலால் தாக்கியவர் கைது
/
நண்பரை பாட்டிலால் தாக்கியவர் கைது
ADDED : நவ 18, 2024 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; அக்கராயபாளையத்தில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 35; வடக்கனந்தல், அம்பேக்கர் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 36; இருவரும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 7ம் தேதி இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், பீர் பாட்டிலால் சந்தோஷ்குமாரை தாக்கினார். புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனர்.