ADDED : நவ 24, 2024 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம், : பாவந்துாரில் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், 38; இவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு பொருட்களை வாங்க சென்றார்.
அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 51; என்பவர், 1000 ரூபாய் கேட்டு முருகேசனிடம் தகராறு செய்து மிரட்டினார்.
முருகேசன் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.