/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஆக 14, 2025 11:49 PM
திருக்கோவிலுார்: ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதால் கிராமத்தில் அவ்வப்போது, தகராறு ஏற்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் போரில் அரகண்டநல்லுார் போலீசார் ஒட்டம்பட்டு கிராமத்திற்கு சென்று ராஜேந்திரன் மகன் தினேஷ், 23; உள்ளிட்ட சந்தேக நபர்கள் குறித்து விசாரணை செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மனைவி அம்பிகா, மகன்கள் தினேஷ், 23; வினோத், 21; மற்றும் 2 பேர் சேர்ந்து, ஊராட்சி தலைவரான முருகன், 46; வீட்டிற்கு சென்று தங்களைப் பற்றிய தகவல் நீதான் போலீசுக்கு கொடுக்கிறாய் எனக்கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
ஊராட்சித் தலைவர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், வினோத் உட்பட 5 பேர் மீது அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனர்.