/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் விளையாட்டு போட்டி துவக்க விழா
/
தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் விளையாட்டு போட்டி துவக்க விழா
தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் விளையாட்டு போட்டி துவக்க விழா
தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் விளையாட்டு போட்டி துவக்க விழா
ADDED : ஆக 14, 2025 11:49 PM

கள்ளக்குறிச்சி: ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடந்தது.
தாளாளர் பாரத்குமார் தலைமை தாங்கினார். பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி செயலாளர் சாந்தி பாரத்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஜாய்ஸ் ரெக்ஸி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் செல்வம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் ஸ்டிரைக்கர் ராமன் விஜயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விளையாட்டில், வெற்றி, தோல்வி எது வந்தாலும் அதற்கு நான் தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டு மாணவர்களின் படிப்பை பாதிக்காது. மாறாக உடலை பாதுகாத்து, சிந்திக்க வைக்கும். நிதானத்தை கற்றுக்கொடுக்கும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
மனதில் இருக்கும் எதிர்மறை சிந்தனைகளை துாக்கி எறிந்து, சரியான செயல்களை தைரியமாக செய்தால் வெற்றி நிச்சயம் என ராமன் விஜயன் பேசினார்.
தொடர்ந்து, ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, மாணவர்களின் அணிவகுப்பும், விளையாட்டு போட்டிகளும் நடந்தன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.