/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் கோபுரத்தில் இருந்து குதித்தவர் பலி
/
கோவில் கோபுரத்தில் இருந்து குதித்தவர் பலி
ADDED : அக் 08, 2025 12:04 AM
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே கோவில் கோபுரத்தின் மீது ஏறி குதித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த டி.கொடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் பிரபாகரன், 32; லாரி டிரைவர். இரண்டு வருடங்களுக்கு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. குடிபழக்கம் உள்ளது. கடந்த 5ம் தேதி இரவு தனது வீட்டுக்கு எதிரில் இருந்த விநாயகர் கோவில் திண்ணையில் மதுபோதையில் அமர்ந்திருந்தார். திடீரென கோவில் கோபுரத்தின் மீது ஏறி கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி சுஜி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.