ADDED : அக் 27, 2024 11:27 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர் மெட்டில்டா மேரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் பள்ளி மேலாண்மைக்குழுவின் அவசியம், குழு உறுப்பினர்களின் பணி, இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பள்ளிக் குழு உறுப்பினர்கள் ஒத்துழைத்தல் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், முக்கியமான தீர்மானம், தேவையற்றது முடிவு செய்து, அவற்றை பெற்றோர் செயலில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வு நடந்தது.
கூட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள 870 அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.