/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சி பொதுமக்கள் பலர் கண்டுகளிப்பு
/
ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சி பொதுமக்கள் பலர் கண்டுகளிப்பு
ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சி பொதுமக்கள் பலர் கண்டுகளிப்பு
ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சி பொதுமக்கள் பலர் கண்டுகளிப்பு
ADDED : ஜூலை 04, 2025 02:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஜூராசிக் வேர்ல்டு பொருட்காட்சியை பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர்.
கள்ளக்குறிச்சியில் ஜூராசிக் வேர்ல்ட் பொருட் காட்சி கடந்த 29ம் தேதி துவங்கியது. முகப்பு தோற்றம் பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் மகிழும் வகையில் ஒலி சத்தத்துடன் கூடிய பல்வேறு வகையான மிருகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் போட்டோ எடுத்து கொள்ள 'செல்பி' பாய்ண்டும் உள்ளது. மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் பலுன் பவுசன், ஜம்பிங், வாட்டர் போட், குதிரை, மயில், மினி கார் ராட்டினங்களும், அதேபோல் பெரியவர்களுக்கு ஜாய்ன்ட் வீல், கொலம்பஸ், கோஸ்டர், 3டி பேய் ைஹஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
இங்குள்ள ஏராளமான கடைகளில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர், பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
பொருட்காட்சிக்கு வருவோர் சுவைத்து மகிழும் வகையில் டெல்லி அப்பளம், வாழைத்தண்டு சூப், ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா போன்ற உணவு தின்பண்ட கடைகள் உள்ளன.
தினம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் பொருட்காட்சியை கண்டுகளிக்க பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதனை கொண்டு வந்து மாணவர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.