/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியுடன் திருமணம்: சிறுவன் மீது போக்சோ
/
சிறுமியுடன் திருமணம்: சிறுவன் மீது போக்சோ
ADDED : செப் 06, 2025 07:23 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் போது, 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த ஆக., 30ம் தேதி சிறுவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்தனர். மறுநாள் 31ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.