/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி சதுர்தசி சிறப்பு பூஜை
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி சதுர்தசி சிறப்பு பூஜை
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி சதுர்தசி சிறப்பு பூஜை
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி சதுர்தசி சிறப்பு பூஜை
ADDED : பிப் 23, 2024 11:54 PM

கள்ளக்குறிச்சி: கரடிசித்தூர் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி சதுர்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்தசி, ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்தசி, சித்திரை திருவோணம், புரட்டாசி வளர்பிறை சதுர்தசி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
அதன்படி கரடிசித்துார் பிரஹன்நாயகி உடனமர் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு மாசி சதுர்தசி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. அதனையொட்டி, நடராஜருக்கு பால், தயிர், கரும்புச்சாறு, பானகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடராஜரும், பிரஹன்நாயகியும் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.