/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கணிதவியல் கண்காட்சி
/
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கணிதவியல் கண்காட்சி
ADDED : டிச 04, 2024 10:31 PM
கள்ளக்குறிச்சி; ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணிதவியல் கண்காட்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்தலி டாக்டர் ஆர்.கே.எஸ்., பள்ளியில் நடந்த கண்காட்சிக்கு, பள்ளியின் தலைவர் டாக்டர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார்.
நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர், கணிதத்துறை தலைவர் நர்கீஸ்பேகம் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் தயார் செய்த கணிதம் சார்ந்த படைப்புகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக காட்சி படுத்தினர்.
இதில், கணித ஆசிரியர்கள் பாரதி, சந்தோஷ்குமார், ராதா, ஜனனி, கலையரசி, நதியா உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஜீசஸ்சுஜி நன்றி கூறினார்.