
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது.
சங்க தலைவர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் அரசு முன்னிலை வகித்தார். செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். தொழிலதிபர் ஜனார்தனன் கொடியசைத்து மே தின ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
முன்னதாக கடைவீதியில் சங்க கொடியை வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன் ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன், வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சேகர், ஜூல் பிகாரலி வாழ்த்தி பேசினார். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.