/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மயானக் கொள்ளை உற்சவம் உளுந்துார்பேட்டையில் சமரச கூட்டம்
/
மயானக் கொள்ளை உற்சவம் உளுந்துார்பேட்டையில் சமரச கூட்டம்
மயானக் கொள்ளை உற்சவம் உளுந்துார்பேட்டையில் சமரச கூட்டம்
மயானக் கொள்ளை உற்சவம் உளுந்துார்பேட்டையில் சமரச கூட்டம்
ADDED : மார் 05, 2024 07:36 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா குறித்த சமரச கூட்டம் நடந்தது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் மயானக் கொள்ளை உற்சவம் விமர்சையாக நடைபெறும். கடந்த ஆண்டு உற்சவத்தின் போது சுவாமியை துாக்கிச் செல்வதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்த ஆண்டு வரும் 9ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது. அதனையொட்டி, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, நேற்று உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே சமரச கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் விஜய பிரபாகரன் தலைமை தாங்கினார். சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும், போலீசாரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தனி நபருக்கு முதல் மரியாதை செய்யக் கூடாது. சுவாமியை தூக்கிச் செல்வதில் பிரச்னை இருப்பதால் இந்து அறநிலையத் துறையினரே சுவாமியை துாக்கிச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டாலும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., தலைமையில் சமரச கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

