/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி மயிலாம்பாறை நிகழ்ச்சி ஒத்தி வைப்பு

ADDED : மே 15, 2025 11:59 PM
கள்ளக்குறிச்சி: மயிலாம்பாறையில் இன்று நடக்க இருந்த கல்லுாரி கனவு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை செயின்ட் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு வரும், 19 ம் தேதி நடக்க உள்ளது. இதில் சங்கராபுரம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம்.
அதேபோல் திருக்கோவிலுார், ரிஷிந்தியம் ஒன்றிய மாணவர்களுக்கு திருக்கோவிலுார் அரசு கல்லுாரியில் வரும் 19ம் தேதி நடக்கிறது.
தொடர்ந்து உளுந்துார்பேட்டை, திருநாவலுார், தியாகதுருகம் ஒன்றிய மாணவர்களுக்கு உளுந்துார்பேட்டை சாரதா மகளிர் கல்லுாரியில் வரும் 21 ம் தேதி நடக்கிறது.
மேலும் கல்லுாரி கனவு நிகழ்ச்சியில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் ஆதார் திருத்தம் போன்ற இ சேவை மையங்களில் வழங்கும் சேவைகளை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.