/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூண்டி கிராமத்தில் மருத்துவ முகாம்
/
பூண்டி கிராமத்தில் மருத்துவ முகாம்
ADDED : டிச 05, 2024 05:57 AM

கள்ளக்குறிச்சி; பூண்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது.
சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடந்த மருத்துவ முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சிவபிரசாந்த், மருத்துவ அலுவலர் கோகுல் ஆகியோர் வருமுன் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினர். முகாமில், பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள்் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஊராட்சி தலைவர்கள் சிவஞானம், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.