/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டம்
ADDED : மார் 19, 2024 10:38 PM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமை தாங்கினார்.தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் அனைவரும் பணிபுரியும் கிராமத்திலேயே கட்டாயம் தங்க வேண்டும்.கிராமங்களில் எதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரியபடுத்த வேண்டும். தேர்தல் அமைதியான முறையில் நடக்க முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.
ஓட்டுச்சாவடி மைங்களில் ஆய்வு
முன்னதாக ஓட்டுச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற தேர்லை முன்னிட்டு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா ஆய்வு செய்தார்.
அப்போது ஓட்டுச்சாவடி மையங்களில் மின் வசதி, குடிநீர் வசதி, சாய் தள வசதி உள்ளனவா என்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தாசில்தார் கோபாலகிருஷ்ணன்,கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர்நலத்துறை தனி தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன்,மண்டல துணை தாசில்தார் ராமசாமி,வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வி.எ.ஓ.ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

