/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சிகளுடன் இன்று கூட்டம்

ADDED : அக் 29, 2025 11:35 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் இன்று சப்கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இது குறித்து திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 அன்று தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி கூட்டம் இன்று மாலை 3:30 மணிக்கு சப் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியை சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் அல்லது தங்களது கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் 2 பேர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.