/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்
ADDED : ஏப் 06, 2025 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதூரை சேர்ந்த அப்பர் மகள் சுகன்யா, 28; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த மார்ச் மாதம், பெற்றோர் வயலுக்கு சென்ற நிலையில், பக்கத்து வீட்டு சிறுவர்களிடம் சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சகுந்தலா புகார் அளித்தார். அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.