/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : நவ 18, 2025 07:23 AM

கள்ளக்குறிச்சி: பங்காரம் லட்சுமி கல்லுாரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமாரி, அசோக் ஆகியோர் பேசினர்.
உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல் குறித்து வணிகவியல் துறை தலைவர் வெங்கடேசன் எடுத்துரைத்தார். தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளியின் துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.