/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்
/
தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்
தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்
தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்
ADDED : நவ 18, 2025 07:22 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணமின்றி தவித்த அவரது நான்கு குழந்தைகளுக்கு, கிராம மக்கள் நிதி அளித்து உதவிய நிலையில், அக்குழந்தைகளிடம் முதல்வர் ஸ்டாலின் போனில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 50; இவரது மனைவி வசந்தி, 45; இவர்களுக்கு லாவ ண்யா, 16, ரீனா, 14, ரிஷிகா, 12, ஆகிய மூன்று மகள்களும், அபினேஷ், 9, என்ற மகனும் உள்ளனர்.
வசந்தி ஏழு ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்தார். கமலக்கண்ணன் அதே கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து, தன் குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார்.
ஏற்கனவே தாயை இழந்த பிள்ளைகள், தற்போது தந்தையையும் இழந்து, செய்வதறியாமல் தவித்தனர். உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட பணமின்றி கலங்கி நின்றனர்.
இதையறிந்த பூட்டை கிராம மக்கள், பணம் வசூலித்து, கமலக்கண்ணனின் இறுதி சடங்கை தாரை, தப்பட்டையுடன் நடத்தி முடித்தனர். கமலக்கண்ணனின் குழந்தைகளுக்கு குடும்ப பராமரிப்பு செலவுக்காக, 70,000 ரூபாய் கொடுத்துள்ளனர். மேலு ம், தாய், தந்தையை இழந்த நான்கு பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய கோரி, கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பினர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த், சங்கராபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியன் உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று, நான்கு குழந்தைகளுக்கும் ஆறுதல் கூறினர். அப்போது, முதல்வர் ஸ்டாலின் மொபைல் போன் வாயிலாக, குழந்தைகளிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார். 'அரசின் சார்பில் வீடு மற்றும் வேலைவாய்ப்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். தைரியமாக இருங்கள்' என, முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.

