sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

செய்தி சில வரிகளில்...

/

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...


ADDED : மார் 10, 2024 06:16 AM

Google News

ADDED : மார் 10, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில் இடங்கள் அளவீடு


திருக்கோவிலுார்: ஆற்காடு கிராமத்தில், பழமை வாய்ந்த ராகவ நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை ஹிந்து சமய அறநிலைத்துறையினர் மேற்கொண்டனர். கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜன் தலைமையில், சார் ஆய்வாளர் சோமசுந்தரம், நில அளவையர்கள் விக்னேஷ், வினோத்குமார் அளவீடு செய்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறை எழுத்தர் மிரேஷ்குமார் உடனிருந்தார்.

அடையாள அட்டை வழங்கல்


கள்ளக்குறிச்சி: மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. எலும்பு முறிவு டாக்டர் கமலசேகரன், காது மூக்கு தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, கண் மருத்துவர் காயத்ரி, மனநல மருத்துவர் பாக்யராஜ், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் ஆகியோர், 241 மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மகளிர் தின விழா


கள்ளக்குறிச்சி: மேலுார் டி.எஸ்.எம்., தொழில் நுட்ப கல்லுாரியில் மகளிர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ஈஸ்வரன் தங்கராஜ் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் சுரேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் தினம் கொண்டாடுவதன் நோக்கம், சமூகத்திலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சம உரிமை உட்பட பல்வேறு தலைப்புகளில் பேசினர். தொடர்ந்து, பெண் துறைத்தலைவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சிவராத்திரி பூஜை


மூங்கில்துறைப்பட்டு: சிவராத்திரியையொட்டி, பழையூர் ராமலிங்கேஸ்வரருக்கு நேற்று முன்தினம் மாலை அபிஷேக ஆராதனை நடந்தது. நள்ளிரவில் சிறப்பு தீபாராதனை நடந்தது. மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் காமராஜ் நகர் முகிலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

எஸ்.பி., அலுவலகத்தில் மகளிர் தின விழா


கள்ளக்குறிச்சி: எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவிற்கு, எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், எஸ்.பி., பேசுகையில், 'முழு அர்ப்பணிப்போடு இரவு, பகல் பாராமல் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதனும் கடமைப்பட்டவர்கள்' என்றார். தொடர்ந்து, பெண் காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

மகளிர் தின விழா


கள்ளக்குறிச்சி: ஒன்றிய அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவிற்கு, சேர்மன் அலமேலு தலைமையில், அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர். விழாவில் பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், செல்வகணேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.

கண் பரிசோதனை முகாம்


சங்கராபுரம்: ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், வழக்கறிஞர் தாமரைச்செல்வன் குடும்பத்தார் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமிற்கு, ரோட்டரி தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், திருநாவுக்கரசு, ராஜேந்திரன், துணை ஆளுனர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லைவேந்தன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 290 பேர் பயனடைந்தனர். சுரேஷ், சீனுவாசன், சுதாகரன், மூர்த்தி, ஜோசப் சீனுவாசன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us