
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு, பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் மற்றும் அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும், மகா தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.