ADDED : ஆக 15, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் ;அத்தியூரில் காணாமல் போன நபர் ஏரியில் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணு, 60; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற கண்ணு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிய நிலையில், அத்தியூர் ஏரியில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.