/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புறக்கணிக்கும் எம்.எல்.ஏ., தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
/
புறக்கணிக்கும் எம்.எல்.ஏ., தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
புறக்கணிக்கும் எம்.எல்.ஏ., தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
புறக்கணிக்கும் எம்.எல்.ஏ., தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்
ADDED : செப் 23, 2024 11:53 PM
தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை வட மாவட்டங்களோடு இணைக்கும் பிரதான தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக ஆளும் கட்சியை சேர்ந்தவர் உள்ளார். இவரது வெற்றிக்கு, கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் பாடுபட்டனர்.
அப்படிப்பட்ட நிர்வாகிளை எம்.எல்.ஏ., புறக்கணித்துவிட்டு, சிலருடன் மட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இது ஒன்றிய மற்றும் இதர நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் மேல் தளம் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
அப்போது நகரமன்ற தலைவர், துணைத் தலைவரான ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மற்றும் நிர்வாகிகளுக்கு பூமி பூஜைக்கான நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.
வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிந்த நகர மன்ற தலைவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என எம்.எல்.ஏ., விடம் நேரடியாக கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
நிர்வாகிகளை புறக்கணித்து வரும் எம்.எல்.ஏ.,வின் இத்தகைய செயலால் ஆளுங்கட்சியினர் இடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

