ADDED : நவ 09, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மொபைல் போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எஸ்.மலையனுாரைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் முத்பூராஜ், 34; இவரது மனைவிக்கு கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. மனைவிக்கு உதவி செய்வதற்காக முத்பூராஜ் மருத்துவமனையிலேயே இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் முத்பூராஜின் சட்டை பையில் இருந்த மொபைல் போனை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பியோடினார்.
இதனைப் பார்த்த அங்கிருந்திவர்கள் அந்த நபரை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி அகரத்தான்கொல்லை தெருவைச் சேர்ந்த சக்திவேல், 41; என்பது தெரிந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.