/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆண்களுக்கான நவீன கருத்தடை ரத ஊர்வலம்
/
ஆண்களுக்கான நவீன கருத்தடை ரத ஊர்வலம்
ADDED : டிச 01, 2024 04:46 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனுார் மற்றும் லக்கி நாயக்கன்பட்டியில் நவீன ஆண்களுக்கான நவீன கருத்தடை இரு வார விழாவை முன்னிட்டு பிரசார ரத ஊர்வலம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியில் ஆண்களுக்கான நவீன கருத்தடை இரு வார விழாவை முன்னிட்டு ரத ஊர்வலம் துவக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதேபோல் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஷீலா ராஜேந்திரன் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி துவக்கி வைத்தார்.
சுகாதார ஆய்வாளர் வள்ளி ஆண்களுக்கான கருத்தடை முறை பற்றி விளக்கம் அளித்தார். அப்போது வட்டார சுகாதார புள்ளியாளர் உதயசூரியன் குடும்ப நல கருத்துரை முறைகளை பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் திருமால்வளவன் மற்றும் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்,

