/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைத்து துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
/
அனைத்து துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
அனைத்து துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
அனைத்து துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
ADDED : டிச 23, 2024 11:11 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்படும் மனுக்களை முடிவு செய்வது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் முன்னிலையில், முதல்வரின் முகவரித்துறை கண்காணிப்பு அலுவலர் லஷ்மிபிரியா அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் ஆன்லைன் போர்டலில் பெறப்படும் மனுக்களை முடிவு செய்தல், துறை சார்ந்த மனு இல்லையெனில் வேறு துறைக்கு மாற்றம் செய்தல், பதில்களை ஆன்லைன் போர்டலில் பதிவேற்றம் செய்தல், குறித்த காலத்தில் முறையான பதில் அளித்தல் உள்ளிட்ட மனுக்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அரசு இ-சேவை மையங்களில் சான்றுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வேளாண் துறை இணை இயக்குநர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சங்கராபுரம் தாலுகா அலுவலகம் ஆகிய அலுவலகங்களிலும் ஆய்வு செய்தார்.