/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை
/
குழந்தைகளுடன் தாய் மாயம்; போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 10, 2025 09:22 PM
கள்ளக்குறிச்சி; வாணாபுரம் அருகே 2 குழந்தைகளுடன் காணாமல் போன தாய் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாணாபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்பிரபு மனைவி ஆர்த்தி, 25; இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜய்பிரபு டிரைவராக பணிபுரிகிறார். கடந்த 8ம் தேதி விஜய்பிரபு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்றார்.
மதியம் வீட்டிற்குச் சென்று பார்த்த போது ஆர்த்தியை காணவில்லை. பள்ளிக்கு சென்று பார்த்ததில் 2 மகள்களையும், ஆர்த்தி அழைத்து சென்று விட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விஜய்பிரபு அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.