ADDED : டிச 29, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; தென்சிறுவள்ளூர் கிராமத்தில் தாய் மாயமானது குறித்து மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை மனைவி மதினா 40, இவர் கடந்த 27 ஆம் தேதி காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் மதினாவை காணவில்லை.
இது குறித்து அவரது மகன் பிரதாப் அளித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.