/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 23, 2024 07:19 AM

கள்ளக்குறிச்சி : சூளாங்குறிச்சியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து சூளாங்குறிச்சிக்கு நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. மணிமுக்தா பாசன கால்வாய் அருகே உள்ள வளைவு பகுதியில் சாலையின் நடுவே மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பைக்கில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க சாலையின் வலதுபுறம் எதிர்திசையில் செல்கின்றனர்.
அப்போது, எதிர்திசையில் வாகனங்கள் வரும் பட்சத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.