/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அத்தியூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
அத்தியூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 01, 2025 02:57 AM
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த அத்தியூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., கிளை செயலாளர் சிங்காரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் பழனி கண்டன உரையாற்றினர்.
அத்தியூர் வடக்கு பகுதியில் வசிக்கும் 97 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கியும் சரிசெய்யப்படாத சமுதாய கூடத்தை சீர்படுத்த வேண்டும், புலந்தாங்கள் ஏரியில் இருந்து கருப்பனார் கோவிலுக்கு அருகே உள்ள விளைநிலத்திற்கு செல்லும் வகையில் உள்ள மண் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

