/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம்
/
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம்
ADDED : நவ 01, 2025 02:57 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுகளுக்கு 3 மற்றும் 4ம் தேதி பொதுவிநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுகளுக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த 28,133 பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான பொது விநியோக திட்ட பொருட்கள் வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய ரேஷன் கார்டுகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

