/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாரியில் பைக் சிக்கி விபத்து ரயில்வே ஊழியர் பலி
/
லாரியில் பைக் சிக்கி விபத்து ரயில்வே ஊழியர் பலி
ADDED : நவ 01, 2025 02:57 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கண்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது, சக்கரத்தில் பைக் சிக்கிய விபத்தில் , ரயில்வே ஊழியர் பலியானார்.
விழுப்புரம் காலேஜ் நகர் பகுதி சேர்ந்த கணேசன் மகன் தீபநாராயணன், 29; விழுப்புரம் அடுத்த கொண்டாகி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஹரிஹரன், 38; இருவரும் திருச்சி தெற்கு ரயில்வே டெக்னீஷியன் கிரேடு -2 பெயிண்டர்கள்.
இருவரும் நேற்று பைக்கில் திருச்சி நோக்கி புறப்பட் டனர். நேற்று காலை 9:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட் சேந்தநாடு நெடுஞ்சாலை - நான்கு வழி சாலை சந்திப்பு பகுதி அருகே சென்றபாது, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை முந்த முயன்றனர். அப்போது, லாரியின் பின் பக்க சக்கரத்தில் பைக் சிக்கி விபத்துக்குள்ளானது.
இதில் தீபநாராயணன், ஹரிஹரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீபநாராயணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஹரிஹரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

