/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடிப்படை வசதி தரக்கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு
/
அடிப்படை வசதி தரக்கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு
ADDED : நவ 01, 2025 02:58 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 12வது வார்டில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மா.கம்யூ., கட்சி வட்ட செயலாளர் ஏழுமலை தலைமையிலான பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
கள்ளக்குறிச்சி நகராட்சி 12 வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதி கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
12வது வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், மாதத்திற்கு இருமுறை கொசு மருந்து தெளித்தல், மின்சார வசதியில்லா குடியிருப்புகளுக்கு மின்வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

