/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 01, 2025 02:58 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகு தியில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் பணிகள் தொடர்பான பயிற்சி வகுப்பு திருக்கோவிலுார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
வாக்காளர் பதிவு அலுவலர் சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார். இதில் திருக்கோவிலுார் தாலுகாவிற்கு உட்பட்ட 70 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்குதல் மற்றும் திரும்பப் பெறுதல் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. 8 ஓட்டுச்சாவடி நிலை கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருக்கோவிலுார் தாலுகா தேர்தல் பிரிவு அலுவலர்கள் செய்திருந்தனர்.

