ADDED : நவ 01, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த இந்திலி காந்தி நகர் சேர்ந்த தீபிகா,19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த 28ம் தேதி வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்ற தீபிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் கல்லுாரியில் விசாரித்தபோது, தீபிகா கல்லுாரிக்கு வராதது தெரியவந்தது.
இது தொடர்பாக தீபிகாவின் தந்தை முனியன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

