/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
ADDED : நவ 01, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த வரதப்பனுார் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று பகல் 12.30 மணிக்கு அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், 41; என்பவரின் பெட்டிக் கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வேல்முருகனை மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

