ADDED : ஏப் 05, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலை முருகன் கோவிலில் நடந்த, கும்பாபிேஷகத்தில், ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலையில் கல்யாண முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்,
நேற்று முன்தினம் காலை கோபுர கலசத்தில், தானியம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது.
பொதுமக்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலையில்,
விநாயகர் வழிபாடு, மகா சங்கல்யம், வாஸ்து சாந்தி, முதலாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, கலசம் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாகவேள்வி, மகாபூரணாஹுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

