/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டோல்கேட்டில் கட்டணத்தை திருப்பி கேட்டு சாலை மறியல் நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு

ADDED : நவ 29, 2024 07:07 AM
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட்டில் பாஸ்டேக் மூலம் வசூல் செய்த பணத்தை திருப்பி கேட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற கட்சியினரின் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 5க்கும் மேற்பட்ட வேன்களில் சென்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் சுங்கச்சாவடியில் 4 வேன்களுக்கு பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் அந்த வேன்களில் வந்த கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர்.
பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு நள்ளிரவு 1.00 மணியளவில் மாடூர் சுங்கச்சாவடி வந்த அவர்கள், தங்கள் வாகனங்களுக்கு ஏற்கனவே வசூலித்த சுங்க கட்டணத்தை திருப்பி கேட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து, 15 நிமிடத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வசூல் செய்த சுங்க கட்டணத்தை டோல்கேட் நிறுவனம் கட்சியினரிடம் திருப்பி கொடுத்ததையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.