/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜாதிச்சான்று மற்றும் பட்டா கேட்டு நரிக்குறவர் கூட்டமைப்பினர் மனு
/
ஜாதிச்சான்று மற்றும் பட்டா கேட்டு நரிக்குறவர் கூட்டமைப்பினர் மனு
ஜாதிச்சான்று மற்றும் பட்டா கேட்டு நரிக்குறவர் கூட்டமைப்பினர் மனு
ஜாதிச்சான்று மற்றும் பட்டா கேட்டு நரிக்குறவர் கூட்டமைப்பினர் மனு
ADDED : ஏப் 28, 2025 10:18 PM
கள்ளக்குறிச்சி:
காட்டுவன்னஞ்சூரில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்கள் ஜாதி ்சான்றிதழ் மற்றும் பட்டா கேட்டு மனு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ஜீவம் தலைமையில் அளித்துள்ள மனு:
காட்டுவன்னஞ்சூரில் வசிக்கும் எங்களுக்கு அரசின் சலுகைகளை பெறவும், குழந்தைகளின் படிப்பிற்காகவும் ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. விண்ணப்பித்தால் அதிகாரிகள் ஜாதி சான்றிதழ் தர மறுக்கின்றனர். அதேபோல், நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா தரவும் மறுக்கின்றனர்.
எனவே உரிய விசாரணை செய்து நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டாவும், எங்கள் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.