
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,: சங்கராபுரத்தில் பா.ஜ., சார்பில் நடந்த தேசியக்கொடி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடியை கொண்டாடும் வகையில், சங்கராபுரத்தில் பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக மும்முனை சந்திப்பில் நிறைவு பெற்றது.
மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மணிமாறன், மலையம்மா, மணிகண்டன், செல்வகணபதி, செந்தில், செல்வம்,சிவப்பிரகாசம்,ராமசாமி, ஜெயவர்மா, சிவக்குமார், துரைவேல், பிரகாசம் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.