/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
/
மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : நவ 18, 2024 06:40 AM

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 77 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாலுகா வாரியாக மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
அரசு எலும்பு முறிவு மருத்துவர் வெங்கடேஷ், காது, மூக்கு, தொண்டை நிபுணர் வாசவி, மனநல மருத்துவர் பாக்கியராஜ், கண் மருத்துவர் லோகநாயகி உள்ளிட்டோர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர்.
முகாமில் பங்கேற்ற 143 பேரில் 77 பேருக்கு மருத்துவசான்றுடன் யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இளநிலை உதவியாளர் கவுதம்ராஜ், தரவு உள்ளீட்டாளர் விஜயலட்சுமி ஆகியோர் முகாமிற்கான பணிகளை செய்தனர்.