தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா


UPDATED : நவ 20, 2026 04:26 PM

ADDED : நவ 20, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 04:26 PM ADDED : நவ 20, 2026 04:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் ஊர்ப்புற நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20ம் தேதி வரை தேசிய நுாலக வார விழா கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், நூலகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, வாணாபுரம் ஊர்ப்புற நுாலகத்தில் தேசிய நுாலக வார விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, நுாலகர் ஹசீனாபேகம் தலைமை தாங்கினார். நுாலக பணியாளர் சிவகாமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் தீபா அய்யனார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிவராஜ், பழனிசாமி, அசோக்குமார் ஆகியோர் வாசிப்பு பழக்கத்தின் அவசியம் குறித்து பேசினர்.

தொடர்ந்து, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய புத்தககங்களை மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். புரவலர் சேர்க்கை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us