/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டிச. 13ம் தேதி தேசிய லோக் அதாலத்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டிச. 13ம் தேதி தேசிய லோக் அதாலத்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டிச. 13ம் தேதி தேசிய லோக் அதாலத்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டிச. 13ம் தேதி தேசிய லோக் அதாலத்
ADDED : நவ 27, 2025 05:05 AM
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் டிச.13 ஆம் தேதி தேசிய அளவில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் முதுநிலை சிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், வானுார், திருவெண்ணெய்நல்லுார், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் வரும் டிச. 13ம் தேதி தேசிய அளவில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்துவரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. சட்ட ரீதியாக சமரச முறையில் தீர்வு காணப்படும். இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

