/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம்
/
இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 16, 2025 11:48 PM

ரிஷிவந்தியம்: மேலப்பழங்கூர் கிராமத்தில் அறம் பழகு அறக்கட்டளை சார்பில் இயற்கை நல்வாழ்வு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூரில் நடந்த மருத்துவ விழிப்புணர்வு முகாமிற்கு அறக்கட்டளை தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
நிர் வாகி தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, இயற்கை மருத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படு த்தி பேசினார்.
அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கை முறையில் சிகிச்சை பெற்று குணமடையலாம், இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது, ஆனால், அலோபதி மருத்துவம் உட்கொள்வதால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் பத்மநாபன், பார்த்திபன், இணைத்தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் சாலமன், அந்தோணிசாமி, ஆரோக்கியதாஸ், விஜயகுமார், பைரவன், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

