ADDED : நவ 16, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் உள்ள குளறுபடிகளை கண்டித்து த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு த.வெ.க., கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பரணிபாலாஜி தலைமை தாங்கினார். மத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் எளிதில்புரியும்படிதிருத்தம் செய்வேண்டும். வாக்குகள் விடுபடாமல் சேர்க்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், கிழக்கு மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர்கள் மோகன், ராமு, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட வழக்கறிஞரணி, சார்பு அணி, மகளிரணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

