/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம்... எப்போது; 4 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மக்கள் அவதி
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம்... எப்போது; 4 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மக்கள் அவதி
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம்... எப்போது; 4 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மக்கள் அவதி
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம்... எப்போது; 4 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மக்கள் அவதி
ADDED : நவ 17, 2025 12:10 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டடம் கட்டப்படாதாதல் வாகனங்களுக்கு உரிமம் மற்றும் சான்றிதழ் பேறுவோர் அவதியடைந்து வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பல ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் தேதி, ரூ.1.69 கோடி மதிப்பில் பெருவங்கூர் கிராம எல்லையில், புதிதாக அலுவலக கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இந்த சாலை வயல்வெளிப் பகுதிகளுக்கு இடையே மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் மின் விளக்குகள் இல்லாத இந்த சாலையில் மாலை நேரங்களில் நடந்து செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019-ல் தனியாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கடந்த 2021 பிப்ரவரி 27ம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றி செல்லும் 50 ஆயிரம் வாகனங்கள், சொந்த உபயோகத்தில் 2.25 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் என மொத்தம் 2.75 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் உரிமம் பெற்று இயங்கி வருகினறன.
கடந்த 4 ஆண்டுகளாகியும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான தனி கட்டடம் கட்டப்படாததால், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலேயே இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தரத்திற்கேற்றவாறு மீட்டிங் ஹால், தஸ்தாவேஜூகள் வைப்பதற்கு இடம், போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அத்துடன் அதிகாரிக்கான ஜீப் வசதியும் இல்லாமல் இருப்பதால் மோட்டார் வாகன ஆய்வாளரது வாகனத்தையே பயன்படுத்தி வரும் நிலையும் நீடித்து வருகிறது.
மேலும் இங்கு பணியில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர் கடந்த மே மாதம் மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் அப்பணியிடம் நிரப்பப்படவில்லை. உளுந்துார்பேட்டை வட்டார் போக்குவரத்து அலுவலரே இங்கு பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலருக்கான நேர்முக உதவியாளர் பணியிடமும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலர் நிலை-2 பணியிடமும், அலுவலக பணியாளர்கள் பணியிடங்களும் நிரப்பபடாமல் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக நிலையில் உள்ள அலுவலர்கள் கூடுதல் பணிச்சுமையால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் இங்கு வரும் வாடிக்கையாளர்களும், கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகர் பணியிடத்தினை உடன் நிரப்ப வேண்டும். அவருக்கான புதிதாக அலுவலகம் கட்டப்படுவதுடன், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகற்கும் உரிய சாலை வசதியை ஏற்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

