/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 7ம் தேதி வெளியீடு
/
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 7ம் தேதி வெளியீடு
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 7ம் தேதி வெளியீடு
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 7ம் தேதி வெளியீடு
ADDED : நவ 17, 2025 12:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 7ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; ஒட்டு அளிப்பவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, தேர்தலுக்கு முன் அல்லது தேவைக்கேற்ப வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிடும். தற்போது, ஒரே வாக்காளர் பல இடங்களில் இடம் பெற்றிருப்பது, இறந்தவர்களின் பெயர் நீக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட சில குறைகளை சரிசெய்யவும், தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டும் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஆரம்பித்துள்ளது.
தற்போது தீவீரமாக நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் டிச., 4ம் தேதியுடன் நிறைவு பெறும். பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் மீது முடிவு மேற்கொள்ளுதல் மற்றும் ஆட்சேபனைகள் மீது தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகள் டிச., 9ம் தேதியில் இருந்து 2026ம் ஆண்டு ஜன., 31ம் தேதி வரை நடைபெறும்.
முன்னதாக, டிச., 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, வாக்காளர் சுருக்க திருத்த பணிகள் டிச., 9ம் தேதியில் இருந்து 2026ம் ஆண்டு ஜன., 8ம் தேதி வரை நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்தது, பிப்., மாதம் 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

